சிந்துவெளி நாகரிகத்தில் சமூக வாழ்வை வரைபடங்களுடன் சித்தரித்து காட்டும் நுால். புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகம் நிலவிய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரத்தை, தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் வழியாக கதை போல் சித்தரிக்கிறது. எப்படி வாழ்ந்தனர், என்னவெல்லாம் செய்தனர், சமூகவியல் நடைமுறை எப்படி இருந்தது போன்ற விபரங்கள் வரைபடங்களுடன் தரப்பட்டுள்ளன.
வாழ்க்கை தரத்தை மேம்படுத்த காட்டு விலங்குகளை பயன்படுத்தியது அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகவலும் கவரும் படங்களுடன் பழங்காலத்தை கண்முன் நிறுத்துகின்றன. பழங்கால வரலாற்றை அறிய உதவும் நுால்.
– ராம்