முகப்பு » கதைகள் » கடற் கொள்ளையர்கள்

கடற் கொள்ளையர்கள்

விலைரூ.135

ஆசிரியர் : பா. முருகானந்தம்

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

  பக்கம்: 247     

திருட்டும், கொள்ளையும் கற்றுத் தரவும், பயிற்சி தரவும் பள்ளிக்கூடம், கல்லூரி, எதுவும் இல்லாமலே, உலகெங்கும் வளர்ந்து உச்சத்தைத் தொட்டு நிற்கிறது.நாட்டுக் கொள்ளையர், காட்டுக் கொள்ளையரை விடவும், கடலில் ஆட்சி நடத்தும் கடற் கொள்ளையர் மிக மோசமானவர். இவரது தோற்றம், வளர்ச்சி, ஆதிக்கம் செல்வாக்குகளை இந்த நூல் மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. கடற்கொள்ளையர் கதையில், சுவாரசியமும் உள்ளது.
உலகெங்கும் உள்ள கடற்கொள்ளையரின் 3000 ஆண்டு வரலாறு, காதல், வீரம், காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள், படிப்பவர் மனதில் வக்கிரமான வாசிப்பை வளர்க்கிறது.கரீபியன் கொள்ளையர் ஸ்பெயின் நாட்டில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து பிழைத்துள்ளனர். எதிரி நாட்டை அழிக்க கடற் கொள்ளையரைப் பயன்படுத்தியும்,  அவருக்கு "சர் பட்டம், விருதுகள் வழங்கியும், ஆங்கிலேயர்கள் அவர்களை வளர்த்த செய்தி படிப்பவரை வியக்க வைக்கிறது.டயோனிசியஸ், டிமெட்ரியஸ், அருஜ், பார்பரோசா போன்ற கடற்கொள்ளையர் கதையும், இந்தியக் கொள்ளையன் கானோஜி கதையும், நல்ல படிப்பினைகள், "களவும் கற்று மற என்பதற்கு மாற்றாக, இந்த நூலைப் படித்தவர், களவைக் கற்று உயர நினைப்பர்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us