முகப்பு » கட்டுரைகள் » தமிழ்க் கல்வெட்டுகளில் அறவியல் கோட்பாடுகள்

தமிழ்க் கல்வெட்டுகளில் அறவியல் கோட்பாடுகள்

விலைரூ.125

ஆசிரியர் : டாக்டர் கா.அரங்கசாமி

வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

 பக்கம்: 288    

தமிழனுக்கு சாதியில்லை, மதம் இல்லை, சடங்குகள் இல்லை என்ற அடிப்படையில், திருவள்ளுவரை ஆதார உணர்வாகக்  கொண்டு, பல்வேறு தமிழ்க்கல்வெட்டுகளை ஆய்வு செய்து இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
பிராமணர்களுக்கு சலுகை இருந்தபோதும், தண்டனை பெற்றனர், விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில், ஊரவை என்னும் குடியரசுகள் அழிவைக் கண்டன என்பதும் இந்த நூலில் காணப்படும்  தகவல்கள்.
தமிழகத்தில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் இருக்கலாம் என்றும் அதில் 5,000 மட்டும் அச்சாகியுள்ளன என, பதிவு செய்கிறார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் வாழ்ந்த அறவியல் கோட்பாடுகளை பிரதிபலிக்கும், இவைகளில் ஆசிரியர் குறிப்பிடும் சில தகவல்கள் சுவையானவை.
கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், தாய்போல நின்று அப்  பணியாளர்களை காத்தன(பக்கம் :99). கிருட்டிண தேவராயர் காலத்தில் அடிமைச் சாசனம் எழுதித்தரும் ஓலைகள் இருந்தன.  பஞ்சபாதிப்பு காரணமாக அடிமைகளாக  வாழ்ந்த நிலை ஏற்பட்டது என, விளக்கும் தகவல்கள், அந்த அடிமைகள் பெரும்பாலும் கோவில் பணிகளில் மட்டுமே ஈடுபட்டதாக காட்டுகிறது. தனிநபர்களுக்கு அடிமையாக அதிகம் செயல்படவில்லை போன்ற  தகவல்கள் உள்ளன. முகமதியர் படையெடுப்பும், அதனால் ஏற்பட்ட அழிவு குறித்த கல்வெட்டு தகவல்கள் புதிய செய்திகளாக தெரிகின்றன (பக்கம் 235).பின்னிணைப்பில் பல கல்வெட்டுகளின் படிகளும் உள்ளன. கல்வெட்டு ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் படிக்க வேண்டிய நூல்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us