முகப்பு » கட்டுரைகள் » பாதை எங்கும் பாடங்கள்!

பாதை எங்கும் பாடங்கள்!

விலைரூ.100

ஆசிரியர் : பேராசிரியர் க.இராமச்சந்திரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை விளக்கும் நுால். படிகளில் இருக்கிறது வெற்றிப் பயணம் என்று துவங்கி, மனதைப் பண்படுத்துவது வரை, 26 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

புல்லாங்குழலில் ஒரு புதிய பாடம், மாற்றம் வாழ்வில் தருமே ஏற்றம், கழுகிடம் கற்கலாம் கணக்கற்ற பாடங்கள், முடிவை முடிவு செய்யுங்கள், உற்சாகத்தின் ஊற்று ஓய்வு, தக்காளி சொல்லும் பாடம், நல்லவை கற்க அல்லவை அகலும், வாசிப்பவர்களே வாழ்கிறார்கள், பாடம் கற்கும் ஆசிரியர்கள் போன்ற தலைப்புள்ள கட்டுரைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் வெளிப்படுகிறது.

மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை; வாங்கும் பொருட்களில் இல்லை. ஆனால் மனதில் இருக்கிறது. தியானம் மூலம் புதிய உற்சாகத்தைப் பெறலாம். எதையும் மாற்றி யோசித்து செயல்பட வேண்டும் என்ற தத்துவத்தை போதிக்கும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us