பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104).
சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயர்வு என்பர். சிறு வயதிலேயே அவர்கள் மனதில் நல்லதை விதைத்து விட்டால், அது செடியாக, மரமாகி அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கச் செய்யும் என்பது கண்கூடு. இந்நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு நீதியை சொல்கின்றன. சிறுவர்களை நல்வழிப்படுத்த இத்தகைய நூல்கள் பயன்படும் என்பது நிதர்சன உண்மை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கி, படிக்க கொடுங்கள்.