இப்படியும் நடக்குமா என வியப்புடன்எண்ண வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு நுால். உலகின் வினோத பழக்க வழக்கங்களை காட்டுகிறது.
சுவாரசியமான தகவல்களை படிப்பதில் உள்ள ஆர்வத்தை முன்வைத்து படைக்கப்பட்ட, 25 கட்டுரைகள் புத்தகத்தில் உள்ளன. புவியியல், வரலாறு, அறிவியல், இலக்கியம் புராணம், வினோத வாழ்க்கை முறை என, பல்துறை சார்ந்து தேர்ந்தெடுத்து எழுதப்பட்டுள்ளது.
பெயருக்கு பதிலாக, சீழ்க்கை ஒலியை அடையாளமாக பயன்படுத்தும் மக்கள், குறுக்கெழுத்து புதிருக்கும், உடற்பயிற்சிக்குமான உறவு, தையல் இயந்திரத்தின் வரலாறு என, பொது அறிவை வளர்க்க உகந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. வாசிப்புக்கு உகந்த வித்தியாசமான நுால்.
– ஒளி