நாம் தமிழர் பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை5. (பக்கம்: 96. விலை: ரூ.30).
ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களும் குறைவு. எனினும் பேட்டைக்குப் பேட்டை புராணச் சொற்பொழிவுகளும், உற்சவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சத்திரபதி சிவாஜிக்கு அவனுடைய தாயார் ஜீஜாபாய் அவனது இளம் பருவத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளைக் கூறி மனதில் பதிய வைத்ததால் தான் பிற்காலத்தில் சிறந்த வீரானகத் திகழ்ந்து ஒரு பெரிய இந்து சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவித்தான். இந்நூலில் நான்கு தலைப்புகளில் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதல் கதை "கடவுளே சாட்சி' சிறப்பாக உள்ளது. ஆனால், அரவம் தீண்டிய வணிகப் பிள்ளையைத் திருஞானசம்பந்தர் திருமருகலில் பதிகம் பாடி உயிர்ப்பித்து மண முடித்ததாக வரலாறு. நூலாசிரியர் திருப்புறம்பியம் என்கிறார் (பக்.17). சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் நூலைப் படித்து ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.