அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176)
இந்து மதத்தின் பண்பாட்டுச் சிறப்பை தெரிந்து கொள்ள வேதங் கள் பற்றிய ஞானம் மிக அவசியம். ஆனால், இந்த வேதங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், தமிழ் மட்டுமே தெரிந்த பலரால், இந்து தர்மத்தின் பெருமை நம்மில் பலருக்கு, அதாவது தமிழ் மட்டுமே தெரிந்த நம்மில் பலருக்கு, வேதங்களின் சிறப்பு தெரியவில்லை. இந்தப் பெரிய குறையை போக்கும் வகையில், ஸ்வாமி மொழி பெயர்த்து வழங்கியுள்ள, இந்த நூல் ஒரு அற்புதமான வரவேற்கப்பட வேண்டிய நூல். ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அதைப் பற்றி விமர்ச்சிப்பதும் குறை சொல்வதும் தமிழர்களுக்கும் கைவந்த கலை. தமிழகத்தில் வேதங்களுக்கு கிடைத்து வரும் விமர்சனங்களும் இத்தகைய வகைப்பட்டதேயாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப் பட்டுள்ள இந்த ரிக் வேத கருத்துக்களை நம் தாய்மொழியில் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுள் மறுப்பு சிந்தனை உடையவர்கள் கூட, கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய போராட் டம் நடத்தும் காலம் இது. ஸ்வாமியின் இந்த அரிய பணியை தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்கும் என நம்பலாம்.