குல தெய்வங்களை ஆராய்ந்து தகவல்களை தொகுத்து தரும் நுால்.
தமிழர் பண்பாட்டு தொன்மங்களில் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், சடங்குகள், குறியீடுகள், ஆடல் பாடல் கலை வெளிப்பாடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. கன்னி தெய்வம், தாய் தெய்வம் பற்றி கூறப்பட்டுள்ளது.
வழிபாட்டு முறைகள் சிறப்பாக தரப்பட்டுள்ளன. புதுச்செருப்பு காணிக்கை தருவதும், பின்னர் அதில் அடித்து கொள்வதும் கூறப்பட்டுள்ளது. பலியிட்டு சாப்பிடுவதும் குலசாமி நேர்த்திக்கடன் வழிபாடாக கூறப்பட்டுள்ளது. குலசாமிகளின் கலை களஞ்சியம்.
– முனைவர் மா.கி.ரமணன்