பகவத்கீதையை இன்றைய வாழ்வியல் நோக்கில் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் நிறைய உதாரணங்களோடு விளக்கும் நுால்.
அன்பாகி, அறிவாகி, அண்டத்திலும், பிண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இறைவனே என்று எடுத்து இயம்புகிறது. எந்த நிலையிலும் இறைவனை சிந்தித்து கொண்டிருப்பதே சமாதி நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறது.
ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போருக்கே ஆத்ம ஞானம் என விளக்குகிறது. பகவத் கீதையை குடும்ப விளக்காக்கி, இல்லறத்தில் நல்லறம் கண்டு முக்திக்கு வழிகாட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்