அனுபவங்களின் வழியாக கிடைத்த பாடங்களை எடுத்து சொல்லும் நுால். கதைகள் போல், 28 கட்டுரைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளை உற்று கவனித்து சுவைபட எழுதப்பட்டுள்ளது. நிகழ்வுகளை நுட்பமாக அவதானிப்பது குறித்து புரிய வைக்கிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் பயணித்த போது கிடைத்த அனுபவங்களின் சாரம் வெளிப்பட்டுள்ளது.
நாடு கடந்து வாழ்வோருக்கு ஏற்படும் துயர்களை விவரிக்கிறது. செயற்கரிய செயல்களை செய்து, எந்த அடையாளமும் இன்றி மறைந்து போவோர் குறித்த சித்திரங்களையும் மனதில் வரைகிறது.
தெருவில் பட்டினியுடன் அலைவோரின் மனிதாபிமானம் குறித்தும் அறிய வைக்கிறது. பல்வேறு மனித முகங்களை நிகழ்வுகள் வழியாக விவரிக்கும் நுால்.
– ஒளி