அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதிக்கு பதவுரை, பொருளுரை கூறும் நுால். பாடலில் சொற்கள் அமைந்த வரிசையிலே பதவுரை தந்துள்ளது, எளிதாக பொருள் உணர உதவும்.
கந்தன் என்ற சொல்லிற்கு பகைவர் ஆற்றலை வற்றச் செய்பவன்; ஆறுருவும் ஒன்றாய் இணைந்தவன்; ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடாய் திகழ்பவன் என்று கூறுகிறது. அநுபூதி என்பதை ஆன்மா இறைவனோடு ஒன்றியிருப்பது என பொருள் தருகிறது.
பாம்புக்கு பகையாக மயில் உள்ளதால் வாழ்வில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற நஞ்சை அழிப்பது மயில் என்கிறது. ஆன்மாவிற்கு முருகன் திருவடியே நிலைக்களன் என்கிறது. பாராயணம் செய்வோருக்கு சிறப்பாக பொருள் உணர்த்தும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து