பாவங்களுக்கு கொடூர தண்டனைகளும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ள நுால்.
கருட புராணம், கட உபநிஷதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தண்டனை அளிக்கப்படுவதாக விளக்கி உள்ளது. பாவம் செய்தோர், அதற்கு துணையாக நின்றோர், பாவம் செய்ய துாண்டியோருக்கு எந்தவித தண்டனை கிடைக்கும் என விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தெரியாமல் செய்ததற்கு என்ன தண்டனை, தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு எந்தவித தண்டனை கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு உள்ளது. ஒருவர் உயிர் ஆறு வழிகளில் பிரியும் என சுட்டிக்காட்டி, அந்த வழிகள் பற்றிய தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. பாவ தண்டனைகளை கதைகள் வாயிலாக விளக்கி தண்டனையை பட்டியலிட்டுள்ள நுால்.
– முகில்குமரன்