சோழர்களை வெற்றி கொண்ட பாண்டியர் பற்றி வரலாற்று பின்னணியில் அமைந்துள்ள நாவல் நுால்.
தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி தளர்ந்த காலத்தில் சுந்தர பாண்டியரும், வீரபாண்டியரும் சேர நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அப்போது, சோழர் வசம் இருந்தது தமிழகம். இருவரும் மீண்டும் ஆட்சியை பிடிப்பது தான் நாவலின் மையக்கரு. அதற்கு அமைத்த வியூகங்கள் எத்தகையது என காட்சிப்படுத்துகிறது.
போர்க்களக் காட்சிகளும், புதுப்புது கருவிகளுடன் நடக்கும் போர் முறைகளும் முப்பரிமாண காட்சி போல் வியப்படையச் செய்கிறது.
நகைச்சுவை உரையாடல்களும், வசனங்களும் கதையை நகர்த்துகின்றன. சுவாரசியமாக படைத்திருப்பது லாவகமாய் இழுத்துச் செல்கிறது. பாண்டியர்களின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்று நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு