பார்வையால் நவரச பாவங்களை உணர்த்துவதால், கண்களுக்கு மகத்தான வலிமை உண்டு என்பதை எடுத்துரைக்கும் நுால். உடலிலும், மனதிலும் அசைவு ஏற்படுத்துவதை உணர்த்துகிறது.
பார்வை பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பரிகாரங்களை தருகிறது. கண் திருஷ்டி என்பது மனிதர்களை மட்டுமின்றி உயிரினங்களையும் பாதிப்பதாக கூறுகிறது. கண் திருஷ்டி தோஷ பொருட்கள் விபரப்பட்டியல் தரப்பட்டு உள்ளது.
கர்ப்பிணியருக்கு மாதவாரியாக கண் திருஷ்டிகள், வியாபார நிறுவனங்கள் சந்திக்கும் திருஷ்டிக்கு பரிகாரங்கள் விபரமாக சொல்லப்பட்டுள்ளன. சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளோர் படிக்க வேண்டிய புத்தகம்.
– டாக்டர் கார்முகிலோன்