திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 200.)
இரண்டு குறுநாவல்கள், நான்கு சிறுகதைகள், ஆசிரியருக்கு ஆண்கள் மீது உள்ள கோபத்துடன் ஆரம்பமாகிறது. முதல் கதையான `கட்டில் மனசு.' தலைமுறை தாகத்தில் இளம் தலைமுறைப் பெண்ணின் இன்றைய ஈடுபாடு விவாதப் பொருளாகிறது. பெண்ணிய வளர்ச்சி, பெண்ணிய சுதந்திரம் பற்றி எல்லாம் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு தாயின் கவனம், குழந்தையின் எதிர்காலத்தை விட, தன் பணியின் மீது கவனம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற முடிவு நெருடலாக இருக்கிறது. எமன் கதையில் சமூக அவலமும் சாமான்யனின் `கையாலாகாத்தனமும்' சொல்லப்பட்டிருக்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் கூடிய படைப்புக்கள்.