ஏகம் பதிப்பகம், 3, முதல் மாடி, பிள்ளையார் கோயில் 2ம் சந்து, திருவல்லிக் கேணி, சென்னை-5. (பக்கம்: 160.)
மொத்தமுள்ள 16 கதைகளும் பரபரப்பான கதைகளே; வெறும் பொழுது போக்குக் கான கதைகள் அல்ல.
ஒவ்வொருவரின் வாழ்க் கையில் நிகழ்ந்த சம்பவங்களைத் திடீர்த் திருப்பங்களோடு தமக்கே உரிய கனல் தெறிக்கும் நடையில் கதைகளை ஆசிரியர் மிகுந்த துணிவோடு படைத்துள்ளார். அத்துடன் வார்த்தைகளில் ஜாலம்; ஜாலங்களில் வார்த்தைகள் உண்டு.
பாராட்டுரை வழங்கிய சுகதேவ் தலைப்பை `ஒரு பெருமூச்சின் ஆழம்' என்று ஏனோ மாற்றியிருக்கிறார். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்.