மலர்மன்னன் வெளியீடு, 1/2, பீட்டர்ஸ் சாலை அரசு ஊழியர் குடியிருப்பு, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்: 218. )அருமையான நாவல். தெளிந்த நீரோடை போன்ற எழுத்து மலர்மன்னர் எழுத்து.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் என்று அறியப்படும் வட்டாரத்தில் 1870-1900ல் வாழ்ந்த `பர்ஸா முண்டாீ என்ற வனவாசியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய நாவல் இது. கள்ளங்கபடமற்ற வனவாசிகளை அடக்கியாண்டு சுரண்டிய ஆதிக்க சக்திகள் அனைத்துக்கும் எதிராகத் தன் இன மக்களைத் திரட்டி விடுதலை இயக்கம் நடத்திச் சிறைப்பட்டு சிறைச்சாலையிலேயே விசாரணைக் கைதியாக உயிர் துறந்தவன் பர்ஸா முண்டா. புரட்சியின்போது வன்முறை கூடாது என்று போதித்தவன் அகிம்சாவாதி.
பூவுலகின் தந்தை - என்றும், பர்ஸா பகவான் என்றும் தன் இனத்தவர்களால் அவன் கொண்டாடப்பட்டான். பர்ஸா பகவான் ஒரு மத ஆசாரி யனாகவும் இருந்திருக்கிறான். தன் மக்களுக்காக விவேகம் மிக்க புதிய சமய நெறியையே அவருக்கு உருவாக்கிக் கொடுத்தான். அந்த அற்புத மனிதனின் வாழ்க்கை வரலாற்றைச் சுவை மிகுந்த ஒரு நாவலாக மாற்றி அமைத்திருக்கும் மலர்மன்னன் பாராட்டுக்குரி யவர்.