விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 104).
இந்த ஜெட் வேக யுகத்தில் மன அழுத்தம் இல்லாதவர்களே கிடையாது. அதனால் வரும் பாதிப்பு களும் அதிகம். ஆசிரியர் மன அழுத்தத்தை மிக அருமையாக அலசி ஆராய்ந்து அதைத் தவிர்ப்பதற்கும், சமாளிப்பதற்குமான வழிமுறைகளை ஒரு உயிர் நண்பரோடு உரையாடும் எளிமையில் சொல்லியிருக்கிறார்."மனம் ஒரு குரங்கு என்று தான் சொல்லி வந்திருக்கின்றனர். அது நாயும் கூட! நாய் மனிதனுக்கு நல்ல நண்பன். விசுவாசம் மிக்க வேலைக்காரன். அதற்கு நல்ல நல்ல பயிற்சிகளைக் கொடுத்துப் பழக்கி வைத்தால் அவற்றைச் சிறப்பாகச் செய்யும். ஆகவே, மனதிற்கும் ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளை கொடுத்துப் பழக்குங்கள். இந்தச் சிறுநூலில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் இது ஒன்று.