பிரேமா பிரசுரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 112).
முத்துக் குவியல் 36 தலைப்புகளில் வெவ்வேறான அறிஞர்களின் கருத்துக் குவியல்.அழகு, அறிவு, அன்பு, ஆசை, ஆண், இன்பம், இறைவன், கணவன் - மனைவி, கல்வி, காதல், ஞானம், சிக்கனம், செயல், செல்வம், திருமணம், பெண், பேரின்பம், மனைவி, வாழ்க்கை, வெற்றி என 36 தலைப்புகளில் சில.மனைவியிடம் போர்வீரன், கோழை (பக்.11) எழுத்தாசை பிடித்தவருக்கு சுக துக்கம் இல்லை (பக்.79) போன்றவை ரசிக்கத்தக்கவை.நாற்பது பக்கங்களுக்கு மேலாக பன்மொழிப் பழமொழிகளை ஆசிரியர் தொகுத்து இருக்கிறார். சில வரி கருத்துக்கள் பல கட்டுரைகளையே உருவாக்கும்படி உள்ளது. நல்ல நூல்.