சாந்தா பப்ளிஷர்ஸ், 13 (5) ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 569)
"அகத்தியன் சொன்ன அரும்பரிபாஷை, அகத்தினில் கொண்டோ ரடைகுவரின்பம்' எனத் தொடங்கும் இந்நூலில் அகத்திய முனிவர் திருவாய் மலர்ந்தருளிய வயித்திய வாத யோக ஞான சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற பச்சிலை மருந்துகளின் பரிபாஷை அகராதி வெளியிடப்பட்டுள்ளது. பச்சிலை பரிபாஷை அகராதி, மறைப்பு வெளிப்படை அகராதி, கருப்பொருள் அகராதி, வைத்திய மூலிகை அகராதி (பதினெண் சித்தர்கள்), பச்சிலை மூலிகை அகராதி, வைத்திய தனிக்குண அகராதி மற்றும் தொகையகராதி, பொருளகராதி போன்றவை இதிலடக்கம். உதாரணமாக: ஐந்துப்பு - இந்துப்பு, கல்லுப்பு, கரியுப்பு, வளையலுப்பு, வெடியுப்பு (பக்:17); திரிலவங்கம் - அகில், செண்பகப்பூ, கிராம்பு (பக்:56); காலைக்குளியல் - பல நோய் போம் பசியுண்டாம் (பக்:224); பச்சரிசிக் கஞ்சி- வாதகபம் போம் (338); இலக்கணம் - 5 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி,(436) கைத்தொழில் -5-எண்ணல், எழுத்தல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல் (441) இவ்விதமாக இந்த பரிபாஷை அகராதி பலவிதத்திலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.