ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. (பக்கம்: 512).
நவீன உலகில் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றுவிட்டது. அச்சுக் கலையில் இருந்து இன்டர்நெட் வரை விரிவடைந்திருக்கிறது. இன்று தமிழ் சார்ந்த பிற துறைக் கல்வியில் மக்கள் தகவல் தொடர்பியல் முக்கிய பங்கு வகிக்கிறது. வேலை வாய்ப்புக்கான கல்விகளுள் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இதனை உணர்ந்து அனைத்து மாணவர்களும் பயன்படும் வகையில் மிகவும் திட்டமிட்டு எளிய நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.வாழ்க்கையில் தகவல் என்பது இன்றியமையாதது. ஆராய்ச்சி என்பதே தகவலை தேடும் முயற்சி தான்.இது தவிர தகவல் தொடர்பின் துவக்க காலம், மரபு வழித் தகவல் தொடர்புச் சாதனங்கள், அதன் வளர்ச்சி, அச்சுக் கலையின் தோற்றம், உலக நாடுகளில் பத்திரிகைகளின் வளர்ச்சி, இந்திய இதழ்களின் தோற்றம், தமிழ் இதழ்களின் வளர்ச்சி, இந்திய வானொலியின் எழுச்சி பற்றி பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.வானொலிக்கு எழுதுதல், வானொலிக்கு தன்னாட்சி போன்றவை பற்றியும் அறிந்து கொள்ளலாம். தற்கால புகைப்படக் கலை, நாட்டுப்புற கலைகள், தமிழ் திரை உலகம், திரைப்பட கதாசிரியர்களும், இயக்குனர்களும், அரசியல் தொடர்பியலும், தமிழ்த் திரைப்படத்தின் தோற்றமும் வளர்ச்சியும், முக்கிய சர்வதேசத் திரைப்பட விழாக்கள், திரைப்பட விருதுகள், திரைப்படச் சட்டங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் மேலை நாடுகளில் தொலைக்காட்சியின் நிர்வாக அமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு, இந்தியா சார்பில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள், இன்டர்நெட், கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் "எர்நெட்' உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வரைபடம் மற்றும் உதாரணங்களுடன் ஆசிரியர்கள் ஸ்ரீகுமார், கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளது சிறப்பம்சம்.