முகப்பு » இலக்கியம் » மூன்று விரல்

மூன்று விரல்

விலைரூ.150

ஆசிரியர் : ஆர்.திருமுருகன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
'சுதர்சன் இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா என்று விமானத்தில் பறந்து மென்பொருள் தயாரித்துக் கொடுப்பவன். இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் வகைமாதிரி. வாழ்க்கையில் முன்னால் இரண்டு அடிகள் வைத்தால் பின்னால் ஓரடியாவது சறுக்குகிறது. வாழ்க்கையில் பல கணங்களிலும் எதிர்கொள்ளக் கடினமான பிரச்னைகளை விட்டு விலகி, கம்ப்யூட்டரை ஒட்டுமொத்தமாக ரீபூட் செய்வது போல கண்டிரோல்-ஆல்ட்டர்-டிலீட் செய்து, மீண்டும் மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா என்று நம் அனைவரையும் போல அவனும் ஏங்குகிறான்.

மென்பொருள் பிழைப்பு என்பது நாய்பட்ட பாடு என்று வெளியில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. இரா.முருகனின் நேர்த்தியான கதைசொல்லலில் நாமும் நிரந்தரமில்லாத மென்பொருள் உலகத்தில் குதிக்கிறோம். காசுக்காக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பறக்கிறோம். நேரம், காலம், சுற்றுப்புறம், கலாசாரம், சொந்த வாழ்க்கை என்று எதையும் சட்டை செய்யக்கூட நேரமில்லை. குறிப்பிட்ட டெட்லைனுக்குள் புராஜெக்ட் முடியவேண்டும். மென்பொருள் சரியாக வேலை செய்யவேண்டும். கிளையண்ட் பணம் தர வேண்டும். அது ஒன்றுதான் முதலாளிக்குக் குறி. அவனது ஏவல் நாயான நமக்கும் அதுதான் குறியாகிறது. இதனால் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் ஒன்றா இரண்டா?

உலகமயமாகும் இன்றைய காலகட்டத்தில் எங்கோ நடக்கும் நிகழ்வுகள் நம்மையும் பாதிக்கின்றன. 9/11 அமெரிக்காவில் கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது மோதும்போது எங்கோ தாய்லாந்தில் உட்கார்ந்து மென்பொருள் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் இந்தியனின் வாழ்விலும் புயல் வீசுகிறது.

மென்பொருள் துறையை மையமாக வைத்துத் தமிழில் இதுவரை இப்படியொரு நாவல் வெளியானதில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us