தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 212. விலை: ரூ.70)
.
கடந்த 1949ல் விடுதலை பெற்றோம். இன்றோடு 56 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. ஒன்பது ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிந்து, பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரவிலே பெற்றோம். விடியவே இல்லை என்று நம் சுதந்திரத்தைப் பற்றி சு.அரங்கநாதன் எனும் புதுக் கவிஞர் கவிதை படைத்தார். இதில் உண்மை இருக்கிறது. விடியாததற்கான காரணம் முழுவதையும் யார் மேலோ சுமத்திவிட முடியாது. மக்களே காரணம். விடியலை நோக்கிய பயணத்தில் நாடு நகராமல், நாட்டை நகர்த்தாமலே மேலிடத்தில் உள்ளோர் இருப்பரே ஆனால் அவர்க்கு விழிப்பூட்டுவதும், தேவையானால் சாட்டை அடி கொடுப்பதும் மக்களின் கடமை.
மக்களை வழி நடத்த வேண்டியது அறிவாளிகளின் கடமை. அந்தக் கடமையையே என் எழுத்துக்கள் ஏந்தி வருகின்றன. கருத்துக்கள் சுடும். அச்சூடு வருத்தப்படுவதற்காகப் போடப்படுவது அன்று. தட்டிக் கொடுப்பதற்காகவும் தட்டி எழுப்புவதற்காகவும் போடப்படும் கருத்துச்சூடு என்று முழங்குகிறார் அறவாணன். சமூ க அவலங்களைச் சொல்லி, தீர்வுகளையும் முன் வைக்கிறார்.