KARUMUTHU THIAGARAJA CHETTIAR Karumuthu Thiagaraja Chettiar The Textile king Dr. (Mrs) Radha Thiagarajan.
வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 238. விலை: ரூ.275)
மதுரை நகரி ல் தொழிற்கூடங்களும், கல்விச் சாலைகளும் பெருமளவில் ஏற்பட காரணமாக இருந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். பொருளீட்டுவதில் அவருக்கு இருந்த அக்கறையைப் போல தமிழ் சமுதாயத்திற்கு அதைச் செலவிடுவதிலும் அக்கறை அவருக்கு அதிகம் இருந்தது.
தமிழ் மொழி மீது அவருக்கு அபாரமான பற்றுதல். தனித் தமிழில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு நாளேடு நடத்தினார். சைவ சமயத்தின் பெருமையை பரப்பும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியவர். கல்விக்கூடங்கள், தொழில் அமைப்புகள் ஒன்று துவங்கி மதுரைக்கு மேலும் சிறப்பு சேர்த்தவர்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை செவ்வியல் ஆங்கில நடையில் நிறைய மேற்கோள்களுடன் சுவைபட எழுதியிருக்கிறார் திருமதி டாக்டர் ராதா தியாகராஜன். கருமுத்து செட்டியாரி ன் தனிப்பட்ட பண்பு நலன், ஆளுமையை நன்கு விவரி த்திருக்கிறார்.
இந்த நூலுக்கு முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வி.சி.குழந்தைசாமி ஒரு முன்னுரை வழங்கியிருக்கிறார்.
நகரத்தார் சமூ கத்தைச் சேர்ந்த கொடை வள்ளல்களின் பணி, தமிழ்ச் சமூ கத்தை ஆன்மிகத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கல்வித் துறையிலும் மிகப் பெரி ய அளவில் வளர உதவியிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அந்த வகையில், கருமுத்து தியாகராஜ செட்டியாரி ன் வாழ்க்கை வரலாறு அழகிய புகைப்படங்களுடன் தமிழக மக்களுக்குப் பல அரி ய தகவல்களை வழங்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. வானதி பதிப்பகத்தாரி ன் புத்தகக் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.