டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , பொள்ளாச்சி (பக்கம்: 358. விலை: ரூ.115)
தமிழ்நாட்டில் எத்தனையோ பெருநிலக்கிழார்கள், செல்வச் செழிப்பல் குபேரர்கள் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். விளம்பரத்தினால் வாழ்கின்றவர்கள் உண்டு. எல்லாரும் புகழ உள்ளம் மகிழ்கின்றனர். இது தான் இன்றைய நிலை.
ஆனால், இதற்கு விதிவிலக்காக வாழ்ந்து காட்டிய பெருமை மறைந்த வள்ளல் பெருந்தகை நாச்சிமுத்துக் கவுண்டர். இரக்க குணமும், வாரி வழங்கத் துடிக்கும் பேருள்ளமும் கொண்டவர். சினம் என்பதை அவர் முகத்தில் காண முடியாது. புன்முறுவல் பூத்த முகம். அகம் தெளிவாக உள்ளதால் முகமும் தெய்வீகம் பெற்றுப் பொலிகிறது.
மிழகத்தில் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகவும், தேசிய உணர்வு உள்ளவராகவும் திகழ்ந்த கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் தொடங்கிய எழுத்துப் பணியைத் தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் பெருமுயற்சி மேற்கொண்டு தம் எழுத்துத் திறமை மிகச் சிறந்த பெரி ய உயர்ந்த நூலாகப் படைத்துப் பலர் அறிய உலா வரச் செய்திருக்கிறார் திருமதி விமலா ரமணி.
ஆன்மிகத்தில் ஊறியவர் நாச்சிமுத்துக் கவுண்டர். அவர் வழியில் பீடு நடை போடுபவர் தான் அருட்செல்வர் மகாலிங்கம்.
"பட முடியாத் துன்பங்கள் பட்டார்
பட்டாலும் உழைத்துழைத்து
தொட முடியாச் சிகரங்கள் தொட்டார்
தொட்ட பின்னும்
தடம் புரளா அருள்நெறியில் நடந்தார்
நடந்தும், முன்னர் கடந்த வழி
மறவாமல் கருணையூறும்
கார்முகிலாய்ப் பெய்து நின்றார்
என்று கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம், வள்ளல் பெருந்தகை நாச்சிமுத்துக் கவுண்டருக்குக் கவிதையில் மகுடம் சூட்டியிருக்கிறார்.
நூல் எல்லாருக்கும் பயன்படும் நூல். உழைப்பால் உயர்ந்த உத்தமரை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?