ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘தங்கக் கோட்டை ஆறாவது புத்தகம். முகுல் என்ற சிறுவனுக்கு பூர்வஜென்ம ஞாபகங்கள் வருகின்றன. முந்தையப் பிறவியில் ராஜஸ்தானின் உள்ள ஒரு தங்கக் கோட்டையின் அருகே தன் வீடு இருந்ததாகவும் அதன் கீழே தங்க நகைகள் புதைக்கப் பட்டிருந்தாகவும் அவன் நினைவுகூறுகிறான்.
பூர்வ ஜென்மம் குறித்து ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஹேமங்க ஹஜ்ரா, முகுலுடன் தங்கக் கோட்டையைத் தேடி ராஜஸ்தான் செல்கிறார். புதையலைக் கைப்பற்ற திட்டமிடும் கொள்ளையார்கள் இவர்களைப் பின்தொடர்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து முகுலைக் காப்பாற்ற ராஜஸ்தான் வருகிறார் ஃபெலுடா. அவர் முகுலைச் சந்தித்தாலும், கொள்ளைக்காரர்கள் அவனைக் கடத்திவிடுகிறார்கள்.
முகுலையும் புதையலையும் கொள்ளையார்களிடம் இருந்து மீட்டாரா, ஃபெலுடா?
தமிழில் : வீ.பா. கணேசன்