கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 190).
"பட்டாசு இருக்கிறது. உள்ளே மருந்தும் இருக்கிறது. அதன் சக்தி வெளிப்பட திரி வேண்டும். திரி பற்ற வைக்கப்பட வேண்டும். நாம் அனைவருமே சக்தி பெற்றவர்கள் தான்' என்று கூறும் ஆசிரியர் "ஒவ்வொரு மனித மனமும் ஓர் உறங்கும் சக்தி; ஒரு தீவிரமான ஆசை அதை உசுப்பிடும் வரை' எட்கார் ராபர்ட்ஸ் கூற்றை நினைவுபடுத்துகிறார்.
"நாம் யார்?' என்று வினா எழுப்பி, "நம்மால் முடியும்!' என்று 49 சுயமுன்னேற்றக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.
"நீ இன்று இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்து வந்தது உன் எண்ணங்கள் தான். உன் எண்ணங்கள் எங்கேயோ அங்கே நாளை நீ இருப்பாய்' ஜேம்ஸ் அலென், போன்று அறிஞர்களின் கருத்துக்கள் ஆங்காங்கே சுவை கூட்டுகின்றன. வாழ்க்கைக்குப் பயனுள்ள பல செய்திகள் இதில் அடக்கம்.