நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304. விலை: ரூ.90)
"சிறு முதலீடு + பெரு உழைப்பு = கணிச லாபம்' என்ற அடிப்படையில் 116 சிறு தொழில்களை இந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. முதல் தலைப்பில், தொழிலை எப்படித் தொடங்கலாம், தேர்வு, விற்பனை வாய்ப்பு, இயந்திரங்கள், தொழில் ஞானம், பொருளாதார வசதி என்பவைகளை ஆசிரியர் விளக்கி உள்ளார்.படித்து முடித்து இன்னொருவரிடம் வேலை கேட்டு, வேலை இல்லாமல் இருப்பதற்கு வீட்டில் உள்ளபடி எத்தனை தொழில்களைச் செய்யலாம். செய்கின்ற தொழிலில் ஓய்வு நேரம் மிகுதியாக இருப்பின் என்ன செய்யலாம் என்பவர்களுக்கு எத்தனை எத்தனை தொழில்கள்.
ஆசிரியர் செய்முறையை மட்டும் சொல்லி விட்டு விடாமல் கச்சாப் பொருள், சாதனங்கள், கவனிக்க வேண்டியவை, மூலப் பொருட்கள் கிடைக்கும் இடம், தகவலுக்கு அணுக வேண்டிய முகவரி என அருமையான நூலைத் தொகுத்துள்ளார்.உணவுப் பொருள், அழகுப் பொருள், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் என 116 தொழில்களுக்கான வழிகாட்டி இந்நூல்! அதிக முதலீடு இல்லாமல் தொழில் புரட்சி காண கட்டியம் கூறுகிறது இந்நூல்.