கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
ஒரு உழவன், தன் தோட்டத்தை உழும்போது ஒரு தங்கச் சிலையைக் கண்டெடுத்தான். அது புத்தர் சிலை.மண்ணில் புதைந்து காணாமற்போன பதினெட்டு புத்தர் சிலைகளில் ஒன்றுதான் அது. நல்ல கனம். ஏராளமான விலைக்குப் போகும் என்றுதெரிந்தது. எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அதை மறைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தான். அவன். குடும்பத்தார்க்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. செல்வத்தில் மிதக்கலாம் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் என்னென்ன வாங்கலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த உழவன் மட்டும் சோகமே உருவமாக ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அதைக் கண்டு அவன் மனைவி ஆச்சரியப்பட்டாள். அவன் அருகில் வந்தாள். என்ன இது. கன்னத்தில் கைவைத்து இப்படிக் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்களே? இவ்வளவு பெரிய செல்வம் கிடைத்திருக்கிறது? அப்புறமென்ன... விஷயம்? என்று கேட்டாள். மற்ற 17 சிலைகளும் எங்கே புதையுண்டு கிடக்கின்றன என்பது தெரியவில்லையே என்றான் அவன் கவலையுடன்.