ட்ரீம் டெக் ப்ரெஸ், அன்சாரி ரோடு, தார்யாகஞ்ச், டில்லி-2. போன்: 97890-62622, 98413-03082, 97860-42782.
இது கணினியுடன் கூடிய சிற்பக் கலை என்றே குறிப்பிடலாம். மீன், சிங்கம், யானை போன்ற சிற்பங்களை சிரிக்க வைக்கவோ பேச வைக்கவோ அழ வைக்கவோ மனிதனால் முடியாது. இச்செயலை அவைகள் செய்யுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை. வளர்ந்து வரும் கணினி உலகில் இவை சாத்தியமே.
மேலே குறிப்பிட்ட சிற்பங்களுக்கு உணர்ச்சியையும் அசைவுகளையும் கொடுத்திட மாயா சாப்ட்வேர் தேவைப்படுகிறது. இவ்வகை மாயா சாப்ட்வேரில் தயாரான திரைப்படங்கள் "மம்மி, "பைன்டிங்நீமோ, "நார்னியா மேலும் மாயா சாப்ட்வேர் கற்றுக் கொண்டால் கட்டட வரைகலை (ஆர்க்கிடெக்ட்), கார், பைக் கம்பெனிகளில் மோல்டிங் (வடிவமைத்தல்) வேலைகளும் கிடைக்கும்.