கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
ஒருகோப்பைத் தேனீர்: 1868- 1912 என்ற காலகட்டத்தில், நான்- இன் என்ற ஒரு ஜப்பானிய ஜென் மாஸ்டர், ஜென்னைப் பற்றி விசாரிக்க வந்திருக்கும் ஒரு பல்கலைக்கழக முதுநிலை ஆசிரியரை வரவேற்றார். நான் இன் அவருக்கு டீயை வழங்கினார். அப்பொழுது அவர் இந்த விருந்தாளியின் கோப்பையில் டீயை ஊற்றும்பொழுது, அது டீயினால் நிறைந்த பிறகும், அது கீழே வழிவதைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருந்தார். இதைக் கவனித்த அந்த முதுநிலை ஆசிரியர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அது நிறைந்து வழிந்து விட்டது. மேலும் ஊற்றுவதால் என்ன பிரோஜனம்? என்று கேட்டார். அதற்கு நான் இன், இந்த கோப்பையைப் போல நீயும் உன்னுடைய கருத்துக்களாலும், யூகங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். நீ முதலில் உன்னையே காலி செய்து கொள்ளாவிட்டால், நான் எப்படி ஜென்னை உனக்குக் காண்பிக்க முடியும்? என்று கேட்டார். கருத்து: முதலில் நீ ஒரு வெற்று மூங்கிலாகு, கடவுள் தன் தெய்வீக கீதத்தை அதன் வழியாக இசைக்கட்டும். நீ எந்த அளவுக்கு உன்னைச் சாதாரணமாக எண்ணிக் கொள்கிறாயோ, அந்த அளவுக்கு நீ அசாதாரணமாக விளங்குவாய்.