முகப்பு » கட்டுரைகள் » கம்பனில் ராமன் எத்தனை

கம்பனில் ராமன் எத்தனை ராமன்

விலைரூ.70

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: 978-81-8476-156-6

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர்.
காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்று பல நிகழ்ச்சிகள் சென்னையில் நடக்க உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் அவர். அவற்றில் ஒரு நிகழ்ச்சிதான் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்!’. ‘நாட்டில் நல்ல சொற்பொழிவாளர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம்’ என்கிறார்.
இந்தத் தொகுப்பில், ஒவ்வொரு ஆண்மகனும் தன் வாழ்வில் மகனாக, சகோதரனாக, மாணவனாக, தலைவனாக, வீரனாக, கணவனாக, மனிதநேயனாக எப்படி இருப்பது என்ற வாழும் கலையை ராமன் வாயிலாகக் காட்டுவதைக் காணலாம்.
ராமாயணத்தில் ராமன் வாழ்ந்த நிலைகள் என்னென்ன; ராமன் எப்படி எல்லா நிலைகளிலும் தன்னிலை மாறாது பிரகாசித்தான்; அவன் அப்படி பிரகாசிப்பதற்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்ந்தது என்ன; அவனைப் போல நாமும் வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள் யாவை என்பது பற்றி ஒவ்வொரு சொற்பொழிவாளரும் அணுகி, ஆராய்ந்திருக்கும் விதம் சிந்தனைக்கு சுவையானதொரு விருந்து!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us