ஸ்ரீ செண்பகா பதிப்பகம், எண்.34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்:288)
"சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி கேளடா! மனிதனாக வாழ்ந்திட வேணும், மனதில் வையடா! வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ வலது கையடா! - போன்ற அமர வரிகளை எழுதி, பாட்டுக் கோட்டையாகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை. 1930ம் ஆண்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள, பட்டுக்கோட்டையில் பிறந்தவர் கல்யாண சுந்தரம். 1956ல் வெளிவந்த "படித்த பெண் தான் இவர் முதன் முதலாகப் பாடல் எழுதிய சினிமாப் படம். 1956ல் ஆரம்பித்து, 1959 வரை தமது தனித்துவமான பேனா முனையால் திரையுலகில் இமயமாக உயர்ந்து நின்றவர்.பட்டுக்கோட்டையாரின் அனைத்து சினிமாப் பாடல்களோடு, அவரது தனிப் பாடல்களும் அடங்கிய இலக்கியப் புதையல்.