விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும்.
இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது.
இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது.
மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று.
இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது.
சிறப்புகள் வாய்ந்த இந்தக் கலையை நூலாசிரியர் ஸ்வாமி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். யோகம், வேதாந்தம் போன்றவற்றோடு, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் விதத்திலும் யோசனைகள் தரப்பட்டுள்ளன.
இன்றைய அவசர யுகத்தில் மனத்தை அமைதிப்படுத்தவும், உடலை சீர்படுத்தவும் உதவும் வகையில் பிராணாயாமத்துக்கான செய்முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.