விலைரூ.55
புத்தகங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
விலைரூ.55
ஆசிரியர் : பா.சு.ரமணன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: 978-81-89936-80-8
Rating
குருவிடம் சரணடைந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கவேண்டும்; ஏனென்றால் குரு நமக்குப் பரிச்சயமானவர்; நம்முடனேயே இருந்து நம்மைத் திருத்திப் பண்படுத்துபவர். நமக்கு நன்கு பழக்கமான அப்படிப்பட்ட ஒரு குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமூட்டுவதும் பற்பல உணர்ச்சிகளின் கோவையுமான சம்பவங்களை இந்நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பா.சு.ரமணன்.
சாதாரண மனிதராகப் பிறந்து உலகம் போற்றும் உத்தமராக, குருவாக மாறிய அவருடைய வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது. அவருடைய உபதேசங்கள் நம்முடனேயே வாழ்பவர் ஒருவர் சொல்வதைப்போல, அவ்வளவு அன்யோன்யமாக இருக்கின்றன; ஆகவே கடைப்பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன.
குட்டிக்குட்டிக் கதைகளின் மூலமாக ஆழ்ந்த உபதேசங்களைக் கொடுக்கிறார் பரமஹம்சர். அதுவும், சூரணத்தில் தேனைத் தடவி குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல அல்லாமல், ஒரு விஷயத்தை உள்வாங்கிக்கொள்வதில் சிரமப்படுபவரும்கூட, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றைத் தெரிவிக்கிறார்.
கடவுளை நினைப்பதும், அவரை மறக்காமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்று பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கிறார். அதேசமயம் குயவன் எவ்வாறு பாண்டத்தைச் செய்யும்போது வலது கையால் களிமண்ணுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரேயடியாக நசித்துவிடாமல் இடது கையால் உள்ளிருந்தே தாங்கிக்கொள்கிறானோ அதைப்போல, ஆன்மிக அன்பர்களையும் சீடர்களையும் அவர் தாங்குவதை இந்நூலில் உணரலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!