நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்:192)
அனுமனின் பிறப்பு, வளர்ப்பு, சம்ஸ்கிருத பாண்டித்தியம், விசேஷ குணாதிசயங்கள் ஆகியவற்றை விளக்கியும், அனுமன் தொடர்பான பல ரசமான புராண நிகழ்ச்சிகளையும் முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அருமையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். இத்துடன் மிகப்பிரசித்தி பெற்ற அனுமன் ஸ்தலங்களைப் பற்றிய விவரங்களையும், அனுமன் துதியையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. பொதுவில், மாருதி பக்தர்களுக்கு இந்த நூல் ஒரு பெரும் விருந்து.