நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:338).
தமிழ் இலக்கிய ஆய்வுகள் முன் பழம்பெருமை பேசும் ஆய்வுகளாக இருந்ததை, சமுதாயங்களின் அமைப்பு, வளர்ச்சி என்ற அடிப்படையில் பின்னர் வந்த ஆய்வாளர்கள் வேறுபட்டு சிந்தித்தனர். இந்தப் புதிய பரிமாண வளர்ச்சி இன்று பலரையும் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்யத் தூண்டின. இந்நூலாசிரியரும் அவ்வகையில் தமிழின் இலக்கியப் படைப்புகளைக் கவிதையியல், சமுதாயவியல் எனும் பிரிவுகளில் ஆய்வு செய்துள்ளார். இந்நூலில், 16 கட்டுரைகள் உள்ளன. பாலைத்திணை மற்ற நான்கிற்கும் பொதுவானதாகக் கலந்துள்ளதோ அதே போன்று கைக்கிளையும் பெருந்திணையும் நானிலத்தைச் சார்ந்ததாகவே நிகழும் என்றும், தொல்காப்பியம் நிலவுடைமையாக மாறிய காலகட்டச் சமுதாயத்தின் இரும்பு நிலைகளை முன் வைப்பதாகப் படித்தரமான ஒரு சமுதாயத்தை முதன்மைப் படுத்துகிறது என்றும் கூறுகிறார். திருக்குறள் காட்டும் அரசின் இயல்புகளை ஆராய்வதும், தொன்மை இலக்கியமான சிலப்பதிகாரக் கதைக்கு அடித்தளம் ஒரு பழங்கதையே என்று கூறி விளக்குவதும் ஆசிரியரின் புலமைத் திறனுக்கும், ஆய்வின் கூர்மைக்கும் எடுத்துக் காட்டுகளாகும். தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நூல். அனைவரும் படித்து இன்புறலாம்.