ஏ.சுப்பிரமணியன், M.ஓ.அம்மன் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை-600004 ( பக்கம்:496)போன்: 044-24660557
இந்த சமுதாயத்தில் விரதங்கள், பூஜைகள், பண்டிகைகள், விசேஷ நாடகள் எனப்பல சடங்குகள் உள்ளன. இச் சடங்குகள் அவர்களின் மன அமைதிக்கும், மனக்கவலையைப் போக்கும் தன்மையிலும், தங்கள் முன்னோர்களை நினைவு படுத்திக்கொண்டு, இவ்வழிபாடுகளைச் செய்யவும் உதவுகின்றன.இந்நூலில், தமிழ்நாட்டின் பண்டிகைகளும், ஸ்ரீராமநவமி, சிவராத்திரி, விளக்கு, சத்யநாராயணா, லக்ஷ்மி போன்ற பெயர்களில் பூஜைகளும், ஆருத்ரா தர்சனம், ரதசப்தமி, ஆடி-மார் கழி, தை, மாசி, பங்குனி மாதச்சிறப்புகள் ஆகியன விளக்கப் பட்டுள்ளன. விரத-பூஜைகளுக்குரிய மந்திரங்களும், செய்முறைகளும், புராணக்கதைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் பன்மொழிப் புலமையும், ஆன்மிக ஞானமும் நூல் முழுவதும் காணலாம்.பல சடங்குகளை நேர்த்தியாகச் செய்ய இந்துக்கள் இல்லத்தில் இருக்க வேண்டிய அருமையான நூலாகும்.