விலைரூ.200
புத்தகங்கள்
Rating
சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5), ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.
(பக்கம்: 480 )
சிடுசிடுத்த முகம், கழுகுப் பார்வை, பரந்த தலையில் தொப்பி, உதட்டு இதழ்களில் புகைத்த வண்ணமிருக்கும் சுருட்டு, ஆங்கில "வி எழுத்து வடிவ வெற்றிக்குறி - இவையே நூலின் நாயகரைப் பளிச்சென்று நமக்கு உணர்த்தி விடும். இரண்டு உலகப் போர்கள் குறித்தும் வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும், எண்ணற்ற தொகுதிகளாக எழுதிக் குவித்த வரலாற்று அறிஞரது அரசியல் ஆணிவேர் "வரலாறு என்பதே! உயிரைப் பணயம் வைத்து விளையாடிய, அசாதாரணமான மனவலிமை மிக்க போர் வீரர், போர் தந்திரி, ஏன், "போர் ப்பிரியர் எனவும் கூறலாம். இந்த அரசியல் சாணக்கியரது நாவன்மையும், அற்புதமான ஆங்கில மொழி ஆளுமையும் ஒப்பற்ற படைப்பாளியாக பரிமளிக்கச் செய்தன. இவர் உருவாக்கிய சொற்றொடர்கள் "இரும்பு திரை மற்றும் "எலும்பில்லா அதிசயம் காலத்தை வென்று நிற்பதும், இலக்கியத்திற்காக, "நோபல் பரிசு வென்றதும், தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. ஆயினும், தன்னிச்சையாக செயல்படுபவர், தற்பெருமை, பதவி மோகம், புகழ்ச்சி மற்றும் வெற்றி வேட்கை கொண்டவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் சொந்தக்காரர். இவரது நீண்ட 90 ஆண்டு கால வாழ்க்கையின் இறுதி நாட்கள் சோகமயமே. மகாபாரத திருதிராஷ்டிரனை போன்று. இந்தியர்களின் நண்பராக சர்ச்சில் செயல்படவில்லை என்பது மறுக்க இயலாத வரலாற்று உண்மை. நம் நாட்டின் சுதந்திரக் கோரிக்கையை எதிர்த்தவர். இந்தியா போன்ற கீழை நாடுகள் பிரிட்டிஷ், சாம்ராஜ்யத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதையும் விரும்பாதவர். காலனி நாடுகளை தொடர்ந்து ஆட்சி புரிந்து, அவர்தம் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களையும், கனிம வளங்கள் மற்றும் இதர மூலப் பொருட்களைச் சுரண்டுவதையே அவர் விரும்பினார் போலும். "அமைதி காலத்திற்கேற்ற வல்லுனர் சர்ச்சில் அல்லவே அல்லர் என்று கருதிய ஆங்கிலேயர்களே அவரை புறக்கணித்த பின்னரும், இந்நூலாசிரியரின், "சர்ச்சில் மோகம் வியப்பளிக்கிறது. அதுவும் இத்தனை பளுவானதோர் வாழ்க்கை சரிதை நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளதற்கு!
வல்லபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், கோவிந்த் வல்லப்பந்த் போன்ற நம் நாட்டு விடுதலைப் போர் வீரர்கள் சொக்கத்தங்கங்கள் எண்ணற்றவர்கள் இருக்க, ஏன் இந்த தூரத்துப் பச்சை?
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!