விலைரூ.40
புத்தகங்கள்
Rating
மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128 )
அரபி மொழியில் கலீல் ஜிப்ரான் எழுதிய தமது காதல் அனுபவத்தைத் தழுவிய புதினத்தை சுவை குன்றாமல் தமிழில் தந்துள்ளார் அரபிப் பேராசிரியர் பஷீர் அஹ்மது ஜமாலி.
""எவன் தமது வாழ்வின் ஏற்றத்தாழ்வு
களில், சீதேவிகளையும், மூதேவிகளையும் மாறி மாறி காணவில்லையோ, அவனது அறிவு ஞானம் ஒரு சூன்யம்! அவனின் உள்ளம் ஒரு வறண்ட பாலை
வனம், என்று தன் ஊமை வேதனைகளை வெளிப்படுத்தும் நாயகம், ""சமூக கீதங்களில் அழகையும், புலம்பல்களையும் தான் கேட்பேன். டேவிட்டின் இறைகீதங்களைக் காட்டிலும் ஜாப்பின் வேதம் எனக்கு அழகாகப்பட்டது. சாலமனின் சங்கீதத்தை விட, ஜெரோமின் இரங்கற்பாற்கள் எனக்கு பிடித்தன.
அப்பாசிய பேரரசை விட பீராமிக்கியர்களின் துரதிர்ஷ்ட வாழ்க்கை என்னை வெகுவாகப் பாதித்தது. உமர் கய்யாமின் நாலடிக் கண்ணிகளை விட இப்னு சர்ரீக்கின் பாடல் என்னுள் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஹேம்லட் மிகவும் பிடித்திருந்தது, இவ்விதமான சோக உணர்வு
களில் ஆழ்ந்து காதல் தோல்வியில் துயரும் ஜிப்ரானின் இந்நாவல் முழுவதும் தத்துவங்களின் தரிசனங்கள் மிக உன்னதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் சுவைத்து படிக்க வேண்டிய நூலிது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!