விலைரூ.50
புத்தகங்கள்
சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்
விலைரூ.50
ஆசிரியர் : பெ.மாதையன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: இலக்கியம்
Rating
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 120)
சங்க இலக்கியம், பொற்கால இலக்கியம் என்ற உணர்வுடனான இலக்கிய ஆய்வுகள் ஒருபுறம், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மறுபுறம். இந்நூல் அறிவியல் பூர்வமாக சங்க இலக்கியங்களை ஆராய்ந்து வேளாண் சமுதாயத்தின் (உழவர் பெருமக்களின்) அன்றைய நிலைகளை எடுத்துக்காட்டியுள்ளது. "சங்க கால சமுதாயத்தில் நிலமே அடிப்படை ஆதாரமாக அமைந்திருந்தது. நிலத்தை மையப்படுத்தியே சமுதாய வாழ்விலும் மாற்றங்கள் ஏற்பட்டன என்பது நூலின் கருத்து. "சங்க சமுதாயத்தின் எல்லா செயற்பாடுகளும் மருத நிலம், மருத நில வருவாய் என்பவற்றை மையமிட்டே செயற்பட்டன என்ற கருத்தையும் நூல் தெளிவுபடுத்துகிறது."திருமுருகாற்றுப்படை தொடங்கி பத்து பாட்டு நூல்களிலிருந்தும், நற்றிணை தொடங்கி எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுகள், மேற்கொண்ட நூலில் நிரம்ப தரப்பட்டுள்ளன. சங்க காலத்தில் கிழார் என்ற சொல்லின் ஆட்சி மிகுந்திருப்பதை பார்க்கலாம். புலவர்கள் பெயர்களிலும் எத்தனை, எத்தனை கிழார்கள் உள்ளனர். கிழான், கிழார், கிழவோன் என்பன நிலவுரிமையுடையவருக்கான பெயர்கள். வேளாண் பெருமக்களுக்கே உரித்தான இச்சொல் அத்தனை புலவருக்கும் அமைந்ததுண்டு. இப்படி பல ஆராய்ச்சி செய்திகளை உடைய இந்நூலை ஆய்வு மனப்பாங்கு கொண்டவர் அனைவரும் படித்த மகிழலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!