விலைரூ.250
புத்தகங்கள்
அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும்
விலைரூ.250
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: இலக்கியம்
Rating
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 498,)
"தமிழ்ச் சமூகம் தொல்பழங்குடியிலிருந்து வர்க்கச் சமூகத்திற்கு மாறிய நிலையை திணைக்கோட்பாடு பிரதிபலிக்கிறது என்பதை மார்க்சிய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்று பதிப்பகத்தார் குறிக்கின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களைப் பயில்வதற்கான கொள்கை வழி முறையாக, திணைக் கோட்பாடு விளங்குகிறது என்பதும் அறியத்தக்கது.
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நான்கு திணைப்புலங்களில் அகவாழ்வின் சமூகப் பொருளாதார நிலைகளையும், அகக்கவிதை வளர்ச்சி பெற்ற வகைப்பற்றியும் இந்நூல் விரிந்துரைக்கிறது. தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடு, சங்க இலக்கியத்தில் நால்வகைத் திணைகளும் திணைக்கோட்பாடும், சங்க இலக்கியத்தில் பாலை, முல்லைத் திணைகள், அகத்திணையும் சமுதாயப் பின்னணியும் எனும் நான்கு பெருந்தலைப்புகளில், அகன்ற பெரிய ஆராய்ச்சியுரையாக இந்நூல் அமைந்துள்ளது. திணைக் கோட்பாடு, அகக்கவிதை மரபு எனும் தொடர்கள் வாசகர்க்கு மலைப்பூட்டுவன. சற்றே கனமான செய்திகள் தாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று ஒவ்வொரு திணைக்கும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில் அடங்கியுள்ள பொருள்கள் பற்றியது மிகப்பெரிய விரிவான செய்தியாகும். சாதாரண வாசகர்களுக்கு எட்டாத பல கருத்துகள் இருப்பதால் தமிழ் கற்று ஆராய்ச்சி மனம் கொண்டவர்க்கே இந்நூல் மிகவும் பயன் தருவதாக அமைந்துள்ளது. நூலின் பக்கங்களை விட அதிகப் பக்கங்கள் கொண்டதான பிற்சேர்க்கையில், கூற்று (யார் சொல்லியது) புலவர், திணை, கருப்பொருள்/பாடு பொருள் எனும் பாகுபாடு கொண்ட அட்டவணை தரப்பட்டுள்ளது. "ஆராய முன் வருவோர்க்கு இந்தப் பட்டியல் பேரளவில் பயன்படும் இயல்புடையது என்று நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அரிய நற்றமிழ் நூலுள் காமராசு " காரமராசு என்றிருப்பதும் "கண்டுக் கொண்ட என்றிருப்பதும் போன்ற அச்சுப்பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!