விலைரூ.165
புத்தகங்கள்
Rating
சங்க இலக்கியங்களுக்கு, எல்லாராலும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவுரை எழுதி, தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களில் புலியூர் கேசிகன் முதன்மையானவர். இவரது சங்க இலக்கிய உரை நூல்கள் பல பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது என்பது, தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். அந்த வகையில், செண்பகத்தார் புலியூர் கேசிகனாரது குறுந்தொகை தெளிவுரை நூலினை பதிப்பித்துள்ளனர். "நல்ல குறுந்தொகை எனும் பழம்பாடல் ஒன்று இவ்விலக்கியத்தினை பாராட்டி மகிழும். இத்தொகை நூல் எட்டுத்தொகையை சார்ந்தது. கடவுள் வாழ்த்து என துவங்கி, பாடல் முதற்குறிப்பு தகவல்களோடு நூல் நிறைவடைகிறது. 401 செய்யுள்களுக்கு விரிவுரை, பாடிய சான்றோர் பற்றிய குறிப்புகள், பாடப்பெற்ற தலைவர்கள் என பிரித்து மிக மிக நேர்த்தியாக வடிவமைக்க பெற்றுள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு பாடலுக்கும் பாடியவர் துறை விளக்கம், கருத்து, விளக்கம், மேற்கோள் என அற்புதமாய் புலியூர் கேசிகனார் தந்துள்ளது இந்நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. அனைத்து தமிழிலக்கிய ஆர்வலர்களது நூலகத்தில் இருக்க வேண்டியது இந்நூல். - குமரய்யா
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!