விலைரூ.130
புத்தகங்கள்
Rating
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -600 098.(பக்கம்: 280)
ஞானசக்தி பாரதி நூற்றாண்டு விழா மலர் - 1982,மணிக்கொடி பொன்விழா மலர் 1984, தாமரை உலகத்தமிழ் மாநாட்டுமலர் - 1994, தழல் - இலங்கை 1997, கணையாழி (ஆகஸ்ட் 99) (டிசம்பர் 2000) இப்படிப் பல காலக்கட்டங்களில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
"நவீனகாலத் தமிழிலக்கிய வரலாறு பலவீனப்பட்டுக் கிடக்கின்றது என்று வேதனைப்படும் நூலாசிரியர், தமிழிலக்கியத்தில் "நவீனத்துவம் தொழிற்பட்டுள்ள முறைமை, பின் நவீனத்துவத்தை அதன் வரலாற்றுப்பின் புலத்தில் ஆராய்தல், 1960க்குப் பின் மேலை நாடுகளில் இலக்கியக் கொள்கைகள் போன்ற மூன்று முனைகளில் இதில் ஆய்வு செய்துள்ளார்.
நவீனத்துவம், பின் நவீனத்துவம் எந்தக்காலக்கட்டத்தைக் குறிக்கிறது என்ற தெளிவான வரையறை, இதில் குறிப்பிடவில்லை. எனினும், எடுத்தாண்டுள்ள கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவை. இலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!