விலைரூ.80
புத்தகங்கள்
சமர்ப்பணம் -யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறும் போதனைகளும்
விலைரூ.80
ஆசிரியர் : ஆர்.கே.ஆழ்வார்
வெளியீடு: யோகி ராம்சுரத்குமார் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: ஆன்மிகம்
Rating
நூல் கிடைக்குமிடம் யோகிராம் சுரத்குமார் டிரஸ்ட், திருவண்ணாமலை,
(பக்கம்: 236)
திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்த பூமி. இந்த நகரின் ஆன்மிக சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், விசிறி சாமியார் என அன்பர்களால் நேசிக்கப்பட்ட யோகிராம் சுரத்குமாரையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இவர் வழக்கம்.
இவருடைய ஒரு பார்வைக்கும், நல்லாசிக்கும் பலர் ஆர்வப்படும் அளவுக்கு, இவரிடம் ஒரு தனி சக்தியை இறைவன் இவருக்கு வழங்கியிருந்தார். யோகியின் ஆன்மிக வாழ்க்கையினையும், அன்பர்களுக்கு யோகியிடமிருந்து கிடைத்த ஆசிகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ள நூல் இது. பலருடைய அனுபவங்களை வாசிக்கும்போது, ஆச்சரியமாக இருப்பதையும் கூறவேண்டும்.
நூலாசிரியர் ஆத்மார்த்தத்துடன் எழுதியுள்ள இந்த நூலினை, விசிறி சாமியார்களின் அன்பர்களுடன் கூட ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்களும் படிக்கலாம். சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள ஆன்மிக சான்றோர் ஒருவரின் புத்தகம் இது.
-
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!