விலைரூ.145
புத்தகங்கள்
கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ
விலைரூ.145
ஆசிரியர் : அமுதன்
வெளியீடு: அனுராதா பதிப்பகம்
பகுதி: வரலாறு
ISBN எண்: -
Rating
1780 ல் பழைய மெட்ராஸ் நகருக்கு ஒரு சாதாரண வெள்ளைக்கார ராணுவ சிப்பாயாக வந்து இறங்கிய மன்றோ, தமது அயராத உழைப்பாலும், அறிவாற்றலாலும் எத்தகு உயரிய நிலைகளையெல்லாம் அடைந்து, இந்த தென்னிந்தியாவுக்கே கவர்னராக ஆனவர். வியக்க வைக்கும் சாதனையாளர் மன்றோ பிரபு. 47 ஆண்டுகள் நம் மண்ணுக்காக உழைத்த எளிய மக்களோடும் இணங்கிப் பழகிய விவசாய, கைத்தொழில்களை ஊக்குவித்த அந்தப்பெருமகனுடைய உயரிய பண்புநலன்களை இதில் காணலாம்.
அவர் கம்பங்கூழ் சாப்பிட்டதையும், வாழைக்காய் பஜ்ஜியை சுவைத்த தகவலும் உண்டு. குளத்தில் தோள்வரை மறைக்கும் வகையில் ஆடையுடன் பெண்கள் குளிப்பதையும், அப்போது எந்த ஆடவரும் சீண்டாமல் இருக்கும் நம் மரபை வியந்துள்ளார் மன்றோ.வரலாற்று விரும்பிகள் மட்டுமல்லாது, இன்றைய ஆட்சியாளர்கள் சகலரும் கற்றறிய வேண்டிய நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!