வரும் வழி பார்த்து:நூலாசிரியர்: ஜோதி பெருமாள். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17.
"எவர்க்குத் தான் வருவதில்லை, ஏற்ற இறக்கங்கள், எல்லாம் நமக்குள்ளே தோன்றிடும் மயக்கங்கள் (பக்.18) என உணர்த்தி, சோதனைப் பள்ளங்களை, சுலபமாய்த் தாண்டி விடு- உன் - சாதனைகளால் உலகத்தையே, உள்ளங்கையில் ஏந்திடு' என்று நம்பிக்கையூட்டும் இக்கவிஞரின் "ஒலி இடர்கள்' ஒரு வித்தியாசமான கற்பனை."முதுகெலும்பற்ற உன்னை விட்டு, மேற்கொண்டு படிக்க நகரம் நோக்கி தனியாய் நான் தொடரும் பயணம் தவறாய்படவில்லை' என்ற புதிய சிந்தனையோடு, பெண்களுக்கு வழியும் காட்டியுள்ளது புதுமை."ஒரு விண்ணப்பம் மட்டும் உன்னிடம், இள வயதில் உன்னுள் தொலைத்த, என் பிம்பங்களில் ஒன்றையேனும் எனக்கு மட்டும் திருப்பித் தரப்பட மாட்டாயா? (பக்.57) என்று "கண்ணாடி'யிடம் ஆதங்கப்படும் உணர்வும் அழகு.மரபு, புதுக்கவிதை, நாட்டுப்புறப் பாடல் போன்ற வகைகளில் மனதைத் தொடும் பல கவிதைகள் இதில் அடக்கம்.