விலைரூ.160
புத்தகங்கள்
ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை
விலைரூ.160
ஆசிரியர் : சாருகேசி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
Rating
727 அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 496)
மகாபாரதக்கதையின் ஊற்றுக்கள், தோற்றுவாய், நதி மூலம், ரிஷி மூலம், என, ஒரு பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தேவ்தத் பட்நாயக்கின் விரிவான, விளக்கமான சுவாரஸ்யமான நூல் இது. மகாபாரதம் செவிவழி கேட்கப்பட்டு, பின் ஏட்டில் இடம் பெற்று அச்சுவாகனம் ஏறியபோது அதன் வடிவமும், தோற்றமும் எத்தகைய மாற்றங்களை எதிர்கொண்டது என்பதை நன்றாக விவரித்துள்ளார், ஆசிரியர். இடையிடையே மகாபாரதத்தின் நிகழ்வுகளை, கதாபாத்திரங்களின் எண்ணப் போக்குகளை மிக நிதானத்துடன் விமர்சனமும் செய்திருக்கிறார். வாசிக்கத் தூண்டும் வகையில், கதையை புதிய கோணத்தில் வழங்கியிருக்கிறார். சாருகேசியின் தமிழ்மொழி பெயர்ப்பை எத்துணை பாராட்டினாலும் தகும். ஏற்கனவே, குருசான்தாயின் மகாபாரத நூலை தமிழில் வழங்கிய சாருகேசியின் இந்த மொழிபெயர்ப்பு தமிழுக்கு செய்துள்ள நல்ல பணி.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!