பக்கம்: 304
எட்டுத் தொகை நூல்களில் மிகவும் சிறப்பாக, "ஓங்கு பரிபாடல் என்று பாராட்டப்படும் நூல் இது. இந்நூலைத் தேடியெடுத்துச் செப்பம் செய்து, பரிமேலழகரின் உரையுடன் முதன் முதலில் தந்த பெருமை, தமிழ்த் தாத்தா, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்குரியது."பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூல்.
தொகுக்கப்பட்ட காலத்தில், 70 பாடல்களாக இருந்தது; இதில், 24 பாடல்கள் உள்ளன. சில பாடல் பகுதிகள், கிடைத்துள்ளன. திருமால், செவ்வேள் (முருகன்) வையை (நதி) பற்றிய பாடல்கள் கொண்ட இந்நூல், தமிழர், தம் வாழ்வியல் முறைகளையும், பக்தியையும், சிறந்த தத்துவச் செய்திகளையும் கூறுகிறது.உரையாசிரியரின், எளிய, இனிய உரை, அனைவரையும் மகிழ்விக்கும் என்று, உறுதியாகக் கூறலாம். நூலின் இறுதியில், பாடிய சான்றோர்கள் பற்றிய குறிப்புகள் படிப்போர்க்கு மிகவும் உதவும். நல்ல உரை நூல்.